Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றி காய்ச்சல் தாக்கிய கர்ப்பிணிக்கு சுக பிரசவம்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:11 IST)
மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பா‌தி‌ப்பு இ‌ல்லை எ‌ன்பது ‌ம‌கி‌ழ்‌ச்‌சியான தகவலாகு‌ம்.

புனேயில் மட்டும் இந்த நோயால் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இங்குள்ள சசூன் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சசூன் மருத்துவமனை தலைமை மரு‌த்துவ‌ர ் அருண் ஜாம்கர் கூறுகையில், 8 மாத கர்ப்பிணி யான 19 வயது இளம்பெண் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எங்கள் மருத்துவமனைக்கு கடந்த 12ம் தேதி வந்தார்.

அவரை பரிசோதனை செய்ததில், பன்றி காய்ச்சல் இருப்பது தெரிந்தது. அவருக்கு கடந்த திங்களன்று சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பன்றி காய்ச்சல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைக்கும் டாமிப்ளு மாத்திரை கொடுக்கப்படுகிறது என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

Show comments