Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சலை தடுக்கலாம்!

ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சலை தடுக்கலாம்!
புதுடெல்லி: , செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (18:25 IST)
பன்றிக் காய்ச்சல் நோயை பரப்பும் எச்1என்1 வைரஸை ஆயுர்வேத மருந்துகளான அபராஜிதா தூபா, நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்று௦ம் தூமபானா ஆகியவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோய்க்கு இந்தியாவில் இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 3 ஆயிரத்தை தொடவுள்ளது.

தொற்று நோயான பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸ், காற்று மூலம் வேகமாக பரவுகிறது. இதனாலேயே இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான் தற்போது பொதுமக்கள் எங்கு சென்றாலும் முகக் கவசம் அணிந்தே வெளியே செல்வதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் நோயை ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாரம்பரிய ஆயுதவேத மருந்தான 'அபாராஜிதா தூபா' பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எட்டு வகை மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'அபாராஜிதா தூபா'வை நெருப்பு கனல்களில் இட்டு, அதன் புகையை வீடு, அலுவலகம் மற்றும் பள்ளி அறைகள் போன்ற நமது சுற்றுப்புற பகுதிகளில் பரவும்படி செய்ய வேண்டும். நாளொன்றுக்கு இருமுறை இப்படி புகை மூட்டம் செய்வதன் மூலம், எச்1என்1 வைரஸ் கிருமிகள் மற்றும் அம்மை நோய் கிருமிகள் போன்றவை அந்த பகுதிக்குள் நிழையாதவாறு தடுக்க முடியும் என்று உலக ஆயுர்வேத காங்கிரஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலரான மருத்துவர் கீதா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நல்லெணெய்யும் (எள் எண்ணெய்) எச்1என்1 வைரஸை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எள் எண்ணெயை நமது மூக்கு துவாரத்தில் தடவினால், நாம் சுவாசிக்கும் போது மூக்கு வழியாக எச்1என்1 வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதை இந்த எண்ணெய் தடுத்து விடுகிறது.

ஒருமுறை நமது மூக்குத் துவாரத்தில் எண்ணெய் தடவினால், குறைந்தது 4 மணி நேரமாவது பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் நம்மை அண்டாது என்றும் மருத்துவர் கீதா விளக்கியுள்ளார்.

இதேபோன்று தூமபானா மருந்துப்பொருளும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்து குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. 'ஆயுஸ்' துறையின் இணை செயலரோ பான்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில், பன்றிக் காய்ச்சல் நோயின் 2வது கட்டத் தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே, அதற்கு முன்னதாக அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேசிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த பணியில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil