Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான அச்சு முறுக்கு செய்ய வேண்டுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

 
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
 
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள்,  ஏலக்காய் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:
 
வாணலியில் எண்ணெய்யை விட்டு காய வைக்கவும்.  எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில்  விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடைக்கும்) எண்ணெய்யில் ஒரு நிமிடம் வைத்து  எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில்  நனைக்கவும்.  அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.  
 
உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணெய்யில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில்  இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணெய்யில் விழுந்து விடும். பொன்னிறமாக  சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.
 
குறிப்பு: அச்சு முறுக்கு செய்யும்போது, முட்டை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments