Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த தேங்காய்பால் அரிசி பாயாசம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - ஒன்று (பெரியது)
பச்சரிசி - அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்

செய்முறை: 
 
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேகவிடவும்.
 
நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை,  ஏலக்காய்ப்பொடி போட்டு முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும். சுவை மிகுந்த தேங்காய்பால் அரிசி பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments