Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெல்லம் பிடிக் கொழுக்கட்டை செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி மாவு - 1 கப்
துருவிய வெல்லம் - அரை கப்
தேங்காய்ப் பல் - கால் கப்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை:
 
பச்சரியை ஊறவைத்து உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள். பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து கொள்ளவும். 
 
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுங்கள். செய்வதற்கு மிகவும் எளிதானது. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments