Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புதமான சுவையில் அவல் பாயசம் செய்ய !!

Webdunia
திங்கள், 2 மே 2022 (16:15 IST)
தேவையான பொருட்கள்:

கெட்டி அவல் - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப்பருப்பு - 5
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை



செய்முறை:

வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.

பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும். 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், ஒரு வடிகட்டியில் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

குறிப்பு: அவல் நன்கு  வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது. இதே போல வெள்ளை சக்கரை சேர்த்தும் செய்யலாம். பாலில் வேகவைக்காமல் தண்ணீரில் வேக வைத்து, பின் இறக்கும் முன் சிறிது பால் சேர்த்தும் செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆண்களுக்கு பிரச்சனை தரும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக என்ன செய்ய வேண்டும்?

சிசேரியன் செய்த பெண்களுக்கு அடிக்கடி இடுப்புவலி வருமா?

நார்ச்சத்து அதிகம் இருக்கும் பேரிக்காய்.. சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments