சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா செய்ய!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பீட்ரூட் - 1
உருளைக்கிழங்கு - 1
சர்க்கரை - ஒரு கப்
பால் - 3 கப்
சோள மாவு - 1 தேக்கரண்டி
முந்திரி - 8
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - கால் கப்
செய்முறை:
 
பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி  அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும். அதனுடன்  சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொண்டே இருக்கவேண்டும். இதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் வரை  கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments