Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தித்திப்பான குலோப் ஜாமுன் செய்ய !!

Webdunia
சனி, 7 மே 2022 (17:38 IST)
தேவையான பொருட்கள்:

குலோப் ஜாம் மாவு - 500 கிராம்
சர்க்கரை - 700 கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - தேவையான அளவு
பிஸ்தா - தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் குலோப் ஜாம் மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும்.

மாவை பக்குவமாக பிசைந்ததும் அதில் தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.

மாவு பக்குவத்தை எட்டுவதற்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு சர்க்கரைக்கு மேலே ஒரு இன்ச் அதிகமாக தண்ணீர் வருமளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டி எண்ணெய்யில் போடவும். மாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். மொத்தமாக பொரித்து போட்டதும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு 5 லிருந்து 6 மணி நேரம் ஊறவிடவும். அவ்வளவுதான் இனிப்பான மற்றும் சுவையான குலோப் ஜாமுன் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments