ஆரோக்கியம் தரும் உளுத்தங்கஞ்சி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
கருப்பட்டி(பனை வெல்லம்) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்
செய்முறை: 
 
உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை லேசாக வறுக்கவும். ஆறிய பின் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி முதல் பால்  கால் லிட்டர் அளவும், இரண்டாம் பால் கால் லிட்டர் அளவும் எடுக்கவும். உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
கருப்பட்டியை நசுக்கி அரை லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும். சுக்கையும், ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும். கிரைண்டர் கழுவிய நீருடன் 1/2 லிட்டர் வருமாறு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன்  சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
 
5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதி வராமல் சூடு ஏறியதும் இறக்கவும். அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விடவேண்டும். இல்லையேல் அடி பிடித்துவிடும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப்பெண்களுக்கு  அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும்.
 
குறிப்பு: உளுத்தம் பருப்பை தனியாக நன்கு குழைய வேகவைத்தும் உபயோகப்படுத்தலாம். அல்லது அரைத்தும் உபயோகப்படுத்தலாம். உளுத்தங்கஞ்சி செய்ய தோல் உளுந்தையும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

வாரம் ஒருமுறை கோவைக்காய் சாப்பிடுங்கள்.. ஏராளமான நன்மைகள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கறிவேப்பிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

முருங்கை கீரையின் மகத்துவமான பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments