Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய....!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
 
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு  சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக்  கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
 
இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments