தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 2 கப் 
வெல்லம் - 2 கப்  
பொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன்
சுக்கு தூள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - பொறிப்பதற்கு 
 
செய்முறை:
 
அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். 
பாகு செய்ய:
 
அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் (கால் டம்ளர்) தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும். 
 
பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள்.  அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி  மாவையும், ஏலக்காய், சுக்கு தூள் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
 
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும்,  மிருதுவாகவும் அருமையாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையரங்குகளில் வாங்கும் பாப்கார்ன் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா?

தக்காளியை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்தல் நல்லதா?!... உண்மையை தெரிஞ்சுக்கோங்க!..

குளிர்கால உடல் பிரச்சனையை போக்கும் கேரட்!.. இவ்வளவு நன்மைகளா!...

நோயை போக்கும் கத்திரிக்காய்!.. இவ்வளவு பலன்களா?!.. வாங்க பார்ப்போம்!...

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments