சுவைமிகுந்த கோதுமை அல்வா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சம்பா கோதுமை, நெய் - தலா கால் கிலோ
சர்க்கரை - முக்கால் கிலோ
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
கலர் - சிறிதளவு
எலுமிச்சம்பழசாறு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 
 
முதலில் கோதுமையை முந்தின நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து, பிழிந்து பால் எடுக்கவும். பாலும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கோதுமைப் பாலில் சர்க்கரையைக் கொட்டி அடி பிடிக்காமல் கிளறிக்  கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும்போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் நெய் மேலாக பிரிந்து வரும். இந்த நெய்யை தனியாக எடுத்துவிடவும். 

பிறகு, இதில் கலர், எலுமிச்சம்பழ சாறு, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து, மிதமான தீயில் அரை மணி நேரம் கிளறி இறக்கவும். சுவைமிகுந்த கோதுமை அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments