Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இனிப்பு சோமாஸ் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
 
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள்:
 
கருப்பு எள் - 1 டேபிள்ஸ்பூன் (வறுத்தது)
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன் (வறுத்தது)
தேங்காய்  - 1/2 மூடி (துருவியது)
சர்க்கரை - 3/4 டம்ளர்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - தலா 5 (பொடியாக அரிந்து கொள்ளவும்).
 
மாவு தயாரிக்க:
 
மைதா மாவு - 1/4 கிலோ
ரவை - 50 கிராம்
சமையல் சோடா - சிறிது,
உப்பு - தேவைக்கு,
டால்டா (அ) பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
 
ஃபில்லிங்குக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி, மாவில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்துக் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். 
 
நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாம் போட்டு வறுத்து, வெள்ளை எள், கருப்பு எள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சிறிது கெட்டியாக இருக்கும். ஆற வைக்கவும். 
 
மாவை பூரி மாவு உருண்டை அளவுக்கு உருட்டி, லேசாக மாவு தடவி திரட்டி, சோமாஸ் அச்சில் வைத்து ஃபில்லிங்கை வைத்து மூடவும். எல்லாவற்றையும் இதே போல் செய்து வைக்கவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி, தணலை மிதமாக வைத்து, சோமாஸை பொரித்து எடுக்கவும். நன்கு திருப்பிப் போட்டு, கருகாமல் எண்ணெய்யை வடிய விட்டு எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு சோமாஸ் தயார்.
 
குறிப்பு: எள்ளை கல்லெடுத்து, வடித்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது பட படவென பொரிய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments