Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இனிப்பு மைதா பிஸ்கட் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பால் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - 3/4 கிண்ணம்
மைதா - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை: 
 
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். பால், சர்க்கரை, நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும். இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
 
மைதா தேவையான அளவு என்று சொன்னாலும், சரியான பக்குவத்தில் இருந்தால் 3 கிண்ணம் மைதா தேவைப்படும். விஸ்க்கால் கலக்கும்போதே மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்பொழுது இரண்டரை கிண்ணம் மாவு சேர்த்து பிசைய வேண்டும்.
 
பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். கத்தி கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான இனிப்பு மைதா பிஸ்கட் தயார். 

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments