Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த சேமியா பாயசம் செய்ய !!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:40 IST)
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.


தேவையான பொருட்கள்:

சேமியா - 1/2 கப்
சக்கரை - 1/2 கப்
பால் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 6
உலர் திராட்சை - 12
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்


செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும். தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும். பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும். சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். சுவை மிகுந்த சேமியா பாயசம் தயார்.

Edited by Sasikala
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments