Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1 
முந்திரி பருப்பு - 1டேபிள் ஸ்பூன் 
பாதாம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
பால் - 3 கப் 
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும் அதில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக வைக்கவும். வேக வைத்த கிழங்கின்  தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும் 5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்த்து நன்கு  வெந்ததும் அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும். 
 
பிறகு சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் பாதாம் பருப்பை அதன் மேல் தூவி விடலாம். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments