Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மாங்காய் - 2
உப்பு - ஒரு துளி,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு
கடுகு - சிறிது
மிளகாய் தூள் - 2
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
 
மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும். 
 
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
 
மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்த வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
 
மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும். மாங்காயின்  புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு என அனைத்து சுவைகளும் சேர்ந்து அருமையான சுவையில் இந்த மாங்காய் இனிப்பு பச்சடி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

அடுத்த கட்டுரையில்
Show comments