சுவையான கோதுமை சுசியம் செய்ய!!

Webdunia
சுவையான கோதுமை சுசியம் செய்ய!!
 
தேவையான பொருட்கள்:
 
பயத்தம் பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - அரைமூடி
ஏலக்காய் - 3
கோதுமை மாவு - 100 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
 
பயத்தம் பருப்பு (தட்டைப்பயறு) இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். வெந்தவுடன் கரண்டியால் நன்கு மசிக்கவும். வெல்லத்தை சிறிது  அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்
 
தேங்காயைத் துருவி, ஏலக்காயை பொடித்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும் .கோதுமை மாவை சற்று நீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு உப்பு, சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும்.

கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் பயத்தம் பருப்பு உருண்டைகளை கோதுமை மாவில்  தோய்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான கோதுமை சுசியம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments