Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சிவப்பு அரிசி- அரை கப்
மைதா மாவு - அரை கப்
வெல்லம்- 1 கப்
பெரிய கனிந்த வாழைப்பழம் - 2
ஏலக்காய் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
இட்லி சோடா - ஒரு பின்ச்
எண்ணெய் - தேவையான அளவு
பாதம் பொடித்தது - ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
 
சிவப்பு அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறிய அரிசியை மிக்சியில் நைசாக அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும். 
 
கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும். வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறியதும் வடிகட்டிகொள்ளவும்.
 
மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் துருவல், வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் அளவை மிதமாக வைத்து மூடிபோட்டு 3 நிமிடம் வேக விடவும். 
 
மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 3 நிமிடம் வேகவிடவும். சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments