Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திணை பாயசம் செய்ய தெரியுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
திணை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (பொடித்தது)
பால் -  1 கப் (காய்ச்சியது)
ஏலக்காய் - 2 (பொடிக்கவும்)
முந்திரி - 8 (வறுக்கவும்)
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:
 
1 கப் அளவு திணையைப் வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். நன்கு வாசனை வரும் வரை அல்லது நெய் சேர்த்தும் வறுத்து கொள்ள  வேண்டும். சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்துகொள்ள வேண்டும்.
 
பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தில் சிறிது  தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும். இவற்றை வெந்த திணையில் ஊற்றி கொதிக்கவிடவும்.
வெல்லம் பச்சை வாசனை போன பின் பாலை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட்டு ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்த்து கலக்கவும். சுவையான திணை பாயசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments