Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான ஜவ்வரிசி பாயாசம் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
ஜவ்வரிசி - கால் கப்
தண்ணீர் - ஒரு கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - தேவைக்கு
சர்க்கரை - அரை கப்
பால் - 1 கப் - 1 1/2 கப்
ஏலக்காய் தூள்
பாதாம், பிஸ்தா

 
செய்முறை:
 
முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 2 விசில் வைத்து எடுக்கவும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும் .பின்பு பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு  முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
 
அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும்  கடைசியாக பால் சேர்க்கவும்
இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து எடுக்கவும். பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா சேர்த்து பின்பு  பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments