Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி இனிப்பு சுவையான ஜாங்கிரி செய்வது எப்படி....?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து  தனியாக வைக்கவும்.
 
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக  பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல  பிடித்துக் கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
 
இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல்  பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவை மிகுந்த ஜாங்கிரி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments