Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான கோதுமை அல்வா செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும்.
 
கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
 
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
 
குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments