Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான கோதுமை அப்பம் செய்வது எப்படி...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
வெல்லம் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 1
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
 
பொடி செய்த வெல்லம், மற்றும் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, வடை மாவை  போல கரைத்துக்கொள்ளவும்.எண்ணெய்யை காய வைத்து ஒரு கரண்டி கொண்டு, மாவை எண்ணெய்யில் ஊற்றவும். வெந்து மேலே எழும்பி வரும்  பொழுது, திருப்பி விட்டு வேக விடவும். சிவந்ததும் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும்.
 
கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும். வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து பிழைந்து கொள்ளவும். வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில்  கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு  அப்பங்கள் வீதம் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும்வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து வைக்கவும்.
 
மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை அப்பம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments