Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா - 1 கப்
உப்பு - சிறிதளவு
உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 
பூரணம் செய்ய:
 
ரவை - 1/2 கப்
மெல்லிய சேமியா - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய்த் துறுவல் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
 
மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
தேங்காயை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வதக்கி தனியாக வைக்கவும். பின்னர் பாத்திரத்தில் வதக்கிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள், ரவை, சேமியா, முந்திரி, திராட்சை, சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவுதான் பூரணம் தயார்.
 
மைதா மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும். தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது கட்டரில் வெட்டி எடுக்கவும். பிறகு மிதமான எண்ணெய் சூட்டில் பொரிக்கவும். சுவையான சோமாஸ்  தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments