Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ஸ்பெஷல்: ஆஹா ருசியில் பாதாம் அல்வா செய்ய !!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:40 IST)
பாதாம் அல்வா உடனடியாக செய்யக்கூடிய ஒரு சுவையான அல்வா வகையாகும். குறிப்பாக இதனை விஷேச நாட்கள் மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில்  செய்வது மிகவும் பிரபலம் ஆகும். இதுதவிர பாதாம் அல்வா திருமணம் போன்ற விசேஷங்களில் செய்யப்படும்.


தேவையான பொருட்கள்:

பாதாம் - 1/2 கப் (இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்தது)
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிது (பாலில் ஊற வைத்தது)

செய்முறை:

பாதாம் அல்வா செய்யும் பொழுது பாதாமை அரைத்து சேர்க்கவும், அது மணமாகவும் சுவையாகவும் இருக்கும். பாதாமை அரைக்கும் பொழுது ஓரளவுக்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், நைசாக அரைக்கும் பொழுது அல்வாவின் பதம் சரியாக வராது. இனிப்புக்கு தகுந்தால் போல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

குங்குமப்பூ சேர்த்த பாலுக்கு பதிலாக 1/4 தேக்கரண்டி ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விடவேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விடவேண்டும். அப்படி கிளறி விடும்போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும்போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும். அப்படி நெய்யானது முற்றிலும் வற்றியதும், வாணலியை இறக்கி, மீதமுள்ள நெய் சேர்த்து ஒருமுறை கிளறி குளிர வைத்தால், பாதாம் அல்வா தயார்.

குறிப்பு: பாதாம் அல்வா ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments