Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் செய்யலாம் அரிசி பாயாசம்; எப்படி..?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:21 IST)
தேவையான பொருள்கள்:
 
பாஸ்மதி அரிசி - 1/4 கப் 
பால் - 4 கப் 
நெய் - 1/4 கப் 
சீனி - 3/4 கப் 
முந்திரிப்பருப்பு - 1/4 கப் 
காய்ந்த  திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராடசை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி   கொதிக்கவிடவும்.
 
கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து இடையிடையே கிளறி விடவும். அரிசி நன்கு வெந்து பால் பாதியாக குறைந்ததும்  சீனியை சேர்த்து  நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறுதியில் நெய், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை ஏலக்காய் தூள் சேர்த்து 2 நிமிடம்  கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான அரிசி பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments