Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைனாப்பிள் பனானா ஷெர்பெட்

பைனாப்பிள் பனானா ஷெர்பெட்
, புதன், 23 ஜனவரி 2013 (18:40 IST)
FILE
இந்த இனிப்பு வகையின் பெயரே பலருக்கு புதிதாக இருக்கும். ஆனால் பைனாப்பிள் பனானா ஷெர்பெட் செய்வதோ மிகவும் சுலபம். இதனை தனியாகவும் சாப்பிடலாம், ப்ரெட் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டாலும் மிக சுவையாக இருக்கும்

தேவையானவை

அன்னாசி பழ துண்டுகள் - 2 கப்
மசித்த வாழைப்பழம் - 2 கப்
சக்கரை - 1 கப்
எலுமிச்சை சாறு - 4 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு - 3 முட்டைகளிலிருந்து எடுக்கப்பட்டது
ஆரஞ்சு பழச்சாறு - 1/2 கப்

செய்முறை

வாழைபழம் மற்றும் அன்னாசி பழ துண்டுகளை கையால் மசித்துக்கொள்ளவும்.

இந்த பழ கலவையுடன் எலுமிச்சை சாறு,ஆரஞ்சு பழச்சாறு, சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை ஃபிரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கவும். இது கெட்டியாக துவங்கும்போது நன்றாக அடித்த முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலக்கி மீண்டும் ப்ரீசரில் வையுங்கள்.

பைனாப்பிள் பனானா ஷெர்பெட் கெட்டியானதும் அதை ஃபிரீசரிளிருந்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: முட்டையின் வெள்ளைக் கரு ஃப்ரீசரில் வைத்து, கெட்டியானதும் அலாதி சுவையை தரும். இதனால் எந்த வித வாசனைகளும் வராது. அது இதனை பாதிக்கவும் செய்யாது.

Share this Story:

Follow Webdunia tamil