Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாம் பிஸ்கெட்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2009 (15:35 IST)
ஆரோக்கியம் மிகுந்த ஜாம் பிஸ்கெட் செய்து கொடுத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 250 கிராம்
டால்டா அல்லது மார்கரின் - 150 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/2 தே‌க்கர‌ண்டி
சர்க்கரை தேவைப்பட்டால் - 50 கிராம்
மிக்ஸட் ப்ரூட் ஜாம் - 75 கிராம்
ஐஸ் வாட்ட‌ர் - கொஞ்சம்
பேஸ்ட்ரிடின் (அல்லது) குக்கரில் வைக்கும் இட்லி தட்டு - 1

செய்முறை:

மைதாமாவையும், பேக்கிங் பவுடரையும் கலந்து சலித்துக் கொள்ளவும்.

டால்டா அல்லது மார்கரினை மாவோடு சேர்த்து விரல் நுனியில் பிசறி விட்டு, ஐஸ் வாட்டரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து கையால் நன்றாக, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல ஒரு தடவை தேய்த்து அதை இரண்டாக வெட்டி சுருட்டிக் கொண்டு மீண்டும் தனித் தனியாக கா‌ல் அ‌ங்குல கனத்திற்கு பூரிபோல தேய்த்துக் கொள்ளவும்.

இதை வட்டமாக வெட்டி பேஸ்ட்ரி டின் அல்லது குக்கர் தட்டில் உள்ள குழிகளில் நெய் தடவி அடுக்கவும். ஸ்பூனால் ஜாமை எடுத்து அவற்றின் மீது வைக்கவும்.

ஓவனில் 40 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வரை பேக் செய்யவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments