Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருகில் வந்த ஆமை

சங்கர்
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:37 IST)
அருகாமை என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை' என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.



காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  online lexicon
இல் கூட  proximity என்றே அருகாமைக்குப் பொருள் சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா


தமிழண்ணலின் ஒரு கட்டுரை:

அருகில் புகுந்த ஆமை

எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை. கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்

தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்- சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு. இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments