Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் களஞ்சியம்

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2013 (18:59 IST)
ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தின் வைட்டமின் 'ஏ' உள்ளது.

ஒரு கிலோ அகத்தி கீரையில் 113 கிலோ ஆப்பிளின் கால்சியம் சத்து உள்ளது.

ஒரு கிலோ அரைக்கீரையில் 32 கிலோ அன்னாசியின் இரும்பு சத்து உள்ளது.

ஒரு கிலோ முருங்கை கீரையில் 7 மடங்கு ஆரஞ்சின் விட்டமின் 'சி' மற்றும் 3 மடங்கு வாழைப்பழத்தின் பொட்டாசியம் சத்து மற்றும் 4 மடங்கு பாலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் 4 மடங்கு கேரட்டின் விட்டமின் 'ஏ' சத்து மற்றும் 2 மடங்கு தயிரின் புரத சத்து உள்ளது.

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சு விடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.

மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுக ி....

மூளையின் சக்தி குறைந்து போகிறது.

புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஷைமர்ஸ் (பெருமறதி) வியாதி வருவதற்கு காரணமாகிறது.

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையை மூடிக் கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.

நன்றி : "பசுமை இந்தியா" செப்டம்பர் 2013 இதழ்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments