Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள்

Webdunia
பலபேர் பின்நவீனத்துவத்தையும் பின்னமைப்பு வாதத்தையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதைத் தமிழகச் சூழலில் நான் கண்டிருக்கிறேன். பின்நவீனத்துவம் ஒரு இலக்கிய-கலாச்சார இயக்கம ், பின்னமைப்புவாதக் கொள்கைகளுக்கும் பின்நவீனத்துவக் கொள்கைகளுக்கும் பல இணைப்புச் சங்கிலிகள் உண்டு என்றாலும் இரண்டும் ஒன்றல்ல. நவீனத்துவக் கொள்கைகளுக்குப் பின்னால ், அதன் கொள்கைகளுக்கு உடன்படாமல் எழுந்த இயக்கம் பின்நவீனத்துவம ், நவீனத்துவம் முன்வைத்த கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று கலைப்படைப்பின் சுதந்திரத் தன்மை ( autonomy of the works of ar t). ஆனால் பின் நவீனத்துவத்தின் மிக முக்கியப் பண்போ நிச்சயமற்ற தன்மை ( indeterminac y). ஹைஸன்பெர்கின் நிச்சயமில்லாக் கொள்க ை, ஹெரால்டு ப்ளும் கூறிய செல்வாக்கின் கவல ை, சராசீன் நாவலை பார்த்து பகுப்பாய்வு செய்த முறை போன்றவை எல்லாம் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக் காட்டுபவை.

தமிழ்ச் சூழலில் நிச்சயமற்ற தன்மை என்பது ஆழமாக உணரப்படவில்லை. மேற்கு நாடுகளைப் போன்று உலகப் போர்களினால் உருவான சூழல்களைச் சந்திக்காததனால ோ, கூட்டுக் குடும்பச்சிதைவு என்ற நிகழ்வு ஏற்பட்டாலும் தனிக்குடும்ப அமைப்பு ஆழமாக வேரூன்றியிருப்பதனாலும் கடவுள் கோட்பாட்டிலும் சாதி போன்ற சமூக அமைப்புகளில் உறுதியான நம்பிக்கை இருப்பதனாலும் தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்திற்கான சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும். மேற்கு நாடுகளில் பின்னப்படுதல் ( fragmentation) மனிதனுக்குள் முழுமையாக நிகழ்ந்துவிட்ட நிலையில் வேறுவித இலக்கியம் அல்லது கலைகளை அங்கு யோசித்துப் பார்க்க முடியாது. மதங்களும் செவ்வியல் நூல்களும் காட்டும் முழுமைத் தன்மை அங்கு இழந்த ஒன்றாகிவிட்டது. நமக்கு அப்படியில்லை. அதனால் தான் நமது பின் நவீனத்துவப் படைப்புகள் வெற்றிபெற முடியவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்கு கடவுளின் மரணம் சம்பவித்த பின் உலகம் பின்னப்பட்டுவிட்டது. குடும்பமும் பின்னப்பட்டுவிட்டது. பின்னப்படுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பின்நவீனத்துவத்தில் இது வடிவங்களின் சிதைவிலும ், மோன்டாஜ் கொலாஜ் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதிலும ், வடிவங்கள் பலவற்றை எதிர்பாராமல் போட்டுக் கலப்பதிலம் வெளிப்படுகிறது.

பின்நவீனத்துவக் கலாச்சாரம் வெகுஜனக் கலாச்சாரம ், நுகர்வுக் கலாச்சாரம் என்பதால் அதில் எல்லா மதிப்பீட்டுச் சட்டகங்களும் ( canon s) அர்த்தமிழக்கின்றன. (தமிழ்நாட்டில் நவீனத்துவத்தின் வருகையே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் இங்கு மதிப்பீட்டுச் சட்டங்கள் நவீன இலக்கியத்திற்கு அறவே உருவாகவில்லை. அதனால் இங்கு வெகுஜனக் கலாச்சாரம் என்பதே அளவுகோலாக ஏற்கப்பட்டுவிட்டது என்பது வெட்கத்திற்குரிய நிலை). ஆகவே வரன்முறையான மதிப்புகள் பின்நவீனத்துவத்தில் தலைகீழாகின்றன. கலாச்சாரம் மதிப்பீட்டுச் சட்டகங்கள் அற்றுப்போகிறது. கலை மேன்மையிழந்து கேளிக்கை யாக்கப்படுகிறது.

பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள ்

கேளிக்கையாக்கல் ( carnivalization) ஓர் அபத்த / தமாஷான சூழலை நமக்குக் காட்டுகிறது. வால்டர் பெஞ்சமின் பாரீஸ் நகரத்தில் புதிய வகை வணிகஸ்தலங்கள் திறக்கப்பட்டபோதே 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே பின்நவீனத்துவம் தோன்றிவிட்டது என்கிறார். தொழிற்புரட்சி பிரிட்டனில் தோன்றினாலும் நுகர்வோரியத்தை ( consumeris m அல்லது நுகர்வியத்தை) முதன் முதலில் உருவாக்கியது பிரான்சு நாடுதான். பாரீசுக் கலாச்சாரம்தான். இரசனையை ஜனநாயகப்படுத்துவதில் காணப்பட்ட அலாதி வெறுப்பு நவீனத்துவத்தைத் தோற்றுவித்தது என்றால ், நுகர்வுக் கலாச்சாரம் பின்நவீனத்துவத்தைத் தோற்றுவித்தது. வெகுஜனக் கலாச்சாரத்தின் சக்திக்கு நவீனத்துவம் மிக எளிதாக வழிவிட வேண்டி வந்தது. கிட்ச் கலாச்சாரத் தேவைகளுக்கு முன் அது நிற்க இயலவில்லை. பின்நவீனத்துவம் கணநேர இன்பம் - நம் முன்னோர்களின் சொற்களில் "சிற்றின்பம்" ( monokrones hedoni s) என்பதை வலியுறுத்துகிறது. எளிதான விஷயங்கள்தான் வேண்டும் இரசிப்பதற்கு என்கிறது. இதனால் எண்ணற்ற கலை வடிவங்களும் இலக்கிய வடிவங்களும் எல்லையற்று ஒன்று கலந்து பார்க்கப்படுகின்றன. அழகியல் மதிப்புகளும் கருத்தியல் சிந்தனையும் ஒன்று கலக்கப்படுகின்றன. திரைப்படமும் இலக்கியமும் - முன்னணிக் கலையும் வெகுஜனக்கலையும் - துன்பியலும் இன்பியலும் - மேன்மையானதும் கீழானதும் - உள்மனப் பேச்சும் ஜால யதார்த்தமும் என்னும் யாவும் ஒன்றாக்கப்படுகின்றன. இன்றைய நுகர்வு - வணிகமய - பன்னாட்டு - உலகமயமாக்கல் சூழலுக்கு ஏற்றவாறான ஒரு அழகியல் உருவாக்க முனைதல் நிகழ்ந்திருக்கிறது.

இனி பின்நவீனத்துவ இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு வரலாம். டேவிட் லாட்ஜ ், பின்நவீனத்துவப் புனைவுகளில் பயன்படுத்தப்படும் ஆறு எடுத்துரைப்பு உத்திகளைப் பட்டியலிட்டார் (இவ்வாறு பட்டியலிடுதல் மிக எளிமையான புரிந்துகொள்ளலுக்கும் கையாளுதலக்கும் வழிவகுக்கும் என்ற பயம் எனக்கு இருப்பினும ், அடிப்படைகளைத் தமிழில் எளிதில் கொண்டு வருவதே இன்றைய தேவையாக நான் உணர்வதால் இவற்றை எழுதுகிறேன்). அவை முரண்படுத்தல் ( contradiction), வரிசைப்படுத்துதல் ( permutation), தொடர்ச்சியின்மை ( discontinuit y), மிகை ( exces s), துழாவும் தன்மை ( randomnes s). குறைச்சுற்று ( short circui t) என்பனவாகும்.

அலைன் ரோபே கிரியேவின் in வாந டயலெ ச iவோ நாவலில் முதல் வாக்கியம் மழை பெய்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியம் சூரியன் பிரகாசிக்கிறது என்கிறது. இம்மாதிரி எழுதுவதன் காரணம ், யதார்த்தத்திற்கும் மொழிக்குமான தொடர்பை அறுப்பது என்று சொல்லப்படுகிறது. பெக்கட்டின் மலாய் ( mollo y) நாவலின் நாயகன் தனது sucking stone-fi s ஒரே வரிசையில் வைத்துச் சுவைக்கவேண்டும் என்று முயல்வது வரிசைப்படுத்தல்-பெர்ம்யுடேஷன் எனப்படுவதற்கு ஒரு உதாரணம். வரிசைப்படுத்தல் தொடர்ச்சியின்மைக்கும் பிரதியின் துழாவும் தன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. (பின்நவீனத்துவப் படைப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய வரிசைப்படுத்தலுக்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் ஒரு நல்ல உதாரணம ், குறிஞ்சிப்பாட்டில் வரும் பூக்களின் வரிசை). பி.எஸ். ஜான்சனின் நாவல்களும் சவுல் சபோர்ட்டாவின் நாவல்களும் தழாவும் தன்மைக்கு நல்ல உதாரணங்கள். இங்கு வாசகன் பல்வேறு சம்பவங்களுக்குள் ஏதொன்றையும் துழாவியெடுத்து தனக்கேற்ற வரிசைமுறையில் அமைத்துக் கொள்ளலாம். ஒரு விளையாட்டுப் போல பல்வேறு வரிசைமுறையில் அமைத்தும் பார்க்கலாம். மிகை என்பது வாசகனுக்குத் தேவையற்ற விதமாக மேலும் மேலும் தகவல்களை அளித்துக் கொண்டே சென்று அதன் மூலம் அவனது விளக்கத்தினைத் தவிர்த்தலாகும். குறைச்சுற்று என்பது புனையப்பட்ட கதாபாத்திரங்களோடு சேர்ந்து நிஜமான ஆசிரியனும் கதையில் பங்கேற்பது.

பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள ்

வெள்ள ி, 20 ஃபிப்ரவரி 2004
பின்நவீனத்துவச் சூழலை ஆங்கிலக் கவிஞர் (நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட) ஜான்டன் எழுதிய உலகத்தின் ஆண்டுவிழா என்னும் கவிதையின் ஒரு பகுதியைக் கொண்டு விளக்கலாம்.

புதிய தத்துவம் எல்லாவற்றையும் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது...

எல்லாம் உடைந்துபோயி ன, எல்லா ஒருங்கமைவும் போய்விட்டது.

எல்லாமே அளிப்புகளும் தொடர்புறுத்தலும் ஆகிவிட்டன...


பின்நவீனத்துவத்திற்கும் நவீனத்துவத்திற்குமான வேறுபாடுகள் என் ன? நவீனத்துவம் மடியாசாரத்தை வலியுறுத்தியது. பின்நவீனத்துவமோ இன்பத்தை வலியுறுத்துகிறது. நவீனத்துவம் தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனைந்தது. வர்ஜினியா வுல்ஃப் வாழ்க்கையை "ஒளிகசியும் உறைக்காகிதம்" என்றும் "ஒளி ததும்பும் ஒளிவட்டம்" என்றும் வர்ணித்தார். நவீனத்துவம் ஒரு மையம் (அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - ஹென்ரி ஜேம்ஸின் வார்த்தைகளில் "கம்பள விரிப்பிலுள்ள டிசைன்" அது) உண்டு என்று நம்பியது. ஒரு குழப்பமான பொருளை பல்வேறு உத்திகளைக் கையாண்டு ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வந்தனர். நவீனத்துவத்தின் முழுமை தேடும் முயற்சிக்கு மாறா க, பின்நவீனத்துவம் முன்பே கூறியவாறு ஒரு நிச்சயமற்ற தன்மையை முன்னிறுத்துகிறது.

ஒரு டிசைன ், வடிவம ், மையம் என்பதெல்லாம் பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை நமக்கு நாமே கொள்ளும் விழைவுச் சிந்தனைகள் ( wishful thinkin g). ஆகவே அப்படியொன்று இல்லை - அது ஒரு "திணிப்பு"தான். உதாரணமாக தாமஸ் பிஞ்ச்சனின் " The crying of Lo t49" நாவலைப் புரிந்து கொள்வதோ அதற்கு மையம் நிர்ணயிப்பதோ மிகக் கடினமாக இருக்கிறது. நவீனத்துவம் புத்திசார்ந்த ( epistemologica l) விஷயங்களைக் கையாண்டதற்கு மாறாக பின்நவீனத்துவம் தோற்றம் சார்ந்த விஷயங்களைப் பிரதானப்படுத்துகிறது.



நவீனத்துவம ்
பின்நவீனத்துவம ்

வடிவம ்
வடிவின்ம ை, எதிர்வடிவம ், திறந்த வடிவம ்

நோக்கம் / குறிக்கோள ்
விளையாட்ட ு, கேளிக்க ை

வடிவமைத்தல் (டிசைன்)
தற்செயல் நிகழ்வ ு

கலைப் பொருண்ம ை
கலைச் செயல்முற ை

தொலைவுபடுத்திக் கொள்ளல ்
பங்கேற்றல ்

ஒருங்கமைத்தல் / படைப்ப ு
தகர்ப்பமைப்பு / எதிர்நில ை

இருப்ப ு
இன்ம ை

நிச்சயத்தன்ம ை
நிச்சயமற்ற தன்ம ை

பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள ்

இம்முரண் இணைகள் நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்குமான தொடர்பை (!) விளக்கப் போதுமானவை.

ஏதோ நவீனத்துவத்திலிருந்து பின் நவீனத்துவம் ஒரு புரட்சிகரமான முறையில் தன்னை வெட்டிக் கொண்டது என்று தோன்றினாலும ், இலக்கிய வரலாற்றில் முற்காலத்திலேயே அதன் சில தன்மைகள் இருப்பதனைக் காணலாம். ஆங்கில இலக்கியத்தில் 1760 இல் இயற்றப்பட்ட ட்ரிஸ்ட்ராம் ஷாண்டி என்னும் நாவல் பின்நவீனத்துவத் தன்மைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில் பின்நவீனத்துவக் கூறுகள் உண்டு. இந்நூற்றாண்டின் பின்நவீனத்துவப் படைப்புகள் தன்நோக்குத் தன்மை ( self-reflectiv e) கொண்டனவாக அமைகின்றன. ஆந்த்ரே ழீட் 1927 இல் எழுதிய டுநள குயரஒ ஆட ி nயேலநரசள இவ்வாறான ஆரம்பகால நாவலாகக் கருதப்படுகிறது. காம்யூவின் வீழ்ச்ச ி, அந்நியன் முதலிய நாவல்களிலும் இத்தன்மைகளைக் காணலாம். காம்யூவின் எழுத்துகளில் மையம ோ, சொல்லுரைக்கு அப்பாலான நிச்சயத்தன்மையோ இல்லை. ஓரளவு நிச்சயத்தன்மை காணப்படும் படைப்புகளிலும ், அது விவாதத்திற்குரியதா க, நம்புமளவு நிச்சயமாக அழுத்திச் சொல்ல முற்படும் சந்தர்ப்பங்களில்தான் நிச்சயமற்ற தன்மை மிகமோசமாக வெளிப்படுகிறது என்பது பின்நவீனத்துவத்தின் சிந்தனை. டெரிடா வெளிப்படையாகவே புனைவிற்கும ், புனை வல்லாததற்கும் வேறுபாடில்லை என்று சொல்லுகிறார் என்றால ், ரிம்போ தமது கவிதைகளிலும் டிமனிக்கு எழுதிய கடிதங்களிலும் குறிப்பாக உணர்த்துவதும் அதுதான். வாசகனைச் சக ஆசிரியனாகப் பாவிக்கும் நோக்கினை போதிலேருக்கும் காஃப்காவுக்கும் கொண்டு செல்லலாம். குறிப்புமுரண ், தொன ி, மையமழித்தல் ஆகிய உத்திகள் வாயிலாக வாசகன்-பிரதி இடையிலான உறவை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கும் வேலையை காஃப்காவின் கோட்டை காட்டுகிறது. இவையாவும் ஆழம் மனத்திலிருக்கும் ஒருவிதமான படைப்பாக்க மனநிலைக்கு வாசகரை இட்டுச் செல்கின்றன. தமது பிரதியைத் தொடர்பறுத்தல்கள ், இடைவெளிகள் வாயிலாக மல்லார்மேயும் பின்நவீனத்துவப் பிரதிகளாக்குகிறார். காம்யூவின் வீழ்ச்சி கதையில் மையமோ உறுதியான நிலைப்பாடோ கிடையாது. ஒத்திப் போடலும ், இடம் பெயர்த்தலும ், காவல்படுத்தலும்தான் காணப்படுகின்றன.

முன்பே கூறியது போல இன்னும் தமிழில் கால் கொள்ளாத (அல்லது கால்கொள்ளாக் காலம் கனியாத) பின்நவீனத்துவம் தான் இலக்கிய நம்பிக்கைகளில் இறுதியானது என்றும் கொள்ளக்கூடாது. இப்போது தமிழில் பின்நவீனத்துவம் தோன்றுவதற்குத் தோதான நுகர்வுக் கலாச்சாரம் வேர்விடத் தொடங்கியிருக்கிறது. என்றாலும் காலந்தோறும் இலக்கிய நம்பிக்கைகளும் கொள்கைகளும் தோன்றுகின்ற ன, மலர்கின்ற ன, விகாசமடைகின்ற ன, மாறுகின்ற ன, அழிகின்றன என்பதை சீரியசான வாசகர்களோ திறனாய்வாளர்களோ மறந்து விடமாட்டார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments