நினைத்ததை சாதித்ததாக கருதவில்லை - சூர்யா பேட்டி

நினைத்ததை சாதித்ததாக கருதவில்லை - சூர்யா பேட்டி

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2016 (18:09 IST)
சூர்யா நடித்துள்ள 24 படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு சூர்யா பேட்டியளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அப்போது அவர் பதிலளித்தார்.


 

 

 
ராஜமௌலி இயக்கத்தில் நீங்கள் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி உலவுகிறதே?
 
ராஜமௌலியை நான் சந்தித்தபோது, பாகுபலி மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தில் சின்ன வேடமாவது பண்ண வேண்டும் என்று அவர் மீது உள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக கேட்டேன். அப்படி ஒரு படம் எதிர்காலத்தில் அமையுமா என்று பார்க்கலாம்.
 
நேரடி தெலுங்குப் படததில் உங்கள் தம்பி கார்த்தி நடித்துவிட்டார். நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?
 
அதுபற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
 
36 வயதினிலே படத்துக்குப் பிறகு உங்கள் மனைவி ஜோதிகா வேறு படங்களில் நடிக்கவில்லையே?
 
36 வயதினிலே படத்துக்குப்பின், அந்த மாதிரி மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு படம் அமையாதது ஏன் என்று தெரியவில்லை. அது தள்ளிப் போவது ஆச்சரியமாக இருக்கிறது. மூன்று கதைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். எது முதலில் வரும் என்பது விரைவில் தெரியும்.
 
நீங்களும் ஜோதிகாவும் எப்போது இணைந்து நடிக்கப் போகிறீர்கள்?
 
அதற்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
நடிகர் சங்கத்துக்காக தயாரிக்கப்படும் படத்தில் நீங்கள் நடிப்பீர்களா?
 
நிச்சயமாக நடிப்பேன். நடிகர் சங்கத்துக்காக கட்டப்படும் புதிய கட்டிடத்தில் அப்பா (நடிகர் சிவகுமார்) பெயரில் ஒரு திரையரங்கை கட்டிக் கொடுக்க முடிவு செய்து இருக்கிறோம்.
 
24 படத்தில் நீங்கள் நடித்துள்ள வில்லன் வேடம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறதே?

அந்த வில்லன் வேடத்தின் பெயர், ஆத்ரேயா. படத்தின் முதுகெலும்பாக அந்த வேடம் அமைந்துள்ளது. வெறும் கோபக்கார வில்லனாக மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமானவராகவும் இருப்பார்.

திரையுலகில் நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்களா?

நினைத்ததை சாதித்து விட்டதாக கருதவில்லை. எல்லாமே அதுவாக நடந்திருக்கிறது. இதை ஆசி என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
 
 
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

திரையுலகில் தடம் பதிக்கும் பிரபுதேவாவின் மகன்: வைரலாகும் முதல் முதலாய் ஆல்பம்

இயக்குனர் அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!.. வைரலாகும் வீடியோ!...

சார் எனக்கு பயமா இருக்கு!... அதிர வைக்கும் காளிதாஸ் 2 டிரெய்லர் வீடியோ!...

Show comments