Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும்: எதை சொல்கிறார் தமன்னா

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:26 IST)
2016 தமன்னாவுக்கு புத்துணர்ச்சி தந்த வருடம். 2017 -இல் அவர் எதிர்பார்க்கும் பாகுபலி இரண்டாம் பாகம் வருகிறது.  அந்தவகையில் அடுத்த வருடமும் எதிர்பார்ப்புக்குரியது. இந்த வருட படங்கள் குறித்த தமன்னாவின் பேட்டி...

 
புத்தாண்டில் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
 
புத்தாண்டில் எந்த திட்டமும் இல்லை. சினிமாவில் திட்டம்போட்டு எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்று நினைத்தால் வேறு  ஒன்று நடக்கும்.
 
இந்த வருட படங்கள் திருப்தியாக அமைந்தனா?
 
நான் இந்த வருடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு திருப்தியை தந்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான  கதாபாத்திரங்களில் வந்தேன்.
 
குறிப்பிட்ட எந்தப் படத்தையாவது சொல்ல முடியுமா?
 
தர்மதுரை படத்தை சொல்லலாம். அதில் என்னுடைய நடிப்பு பேசப்பட்டது. தோழ படத்திலும் என்னுடைய நடிப்பு பேசப்பட்டது.  தமிழ், தெலுங்கு இரண்டிலும் அப்படம் வெற்றி பெற்றது.
 
தேவி சரியாகப் போகவில்லை என்கிறார்களே?
 
தேவி படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. அந்த படத்தில் பிரபுதேவா எனது  நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்து இருந்தார். என்னுடைய நடனம் அதில் பாராட்டி பேசப்பட்டது.
 
வெற்றி, தோல்விகள் உங்களை பாதிக்குமா?
 
நான் வெற்றி தோல்விகளை கவனத்தில் எடுப்பது இல்லை. கதை, கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்று மட்டுமே  பார்க்கிறேன். அப்படிப்பட்ட படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறேன்.
 
வெற்றிக்கான அளவுகோல் என்னவென்று நினைக்கிறீர்கள்?
 
படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பது முக்கியம். ரசிகர்களை கவரும் படங்கள்தான் வெற்றிப் படங்கள்.
 
இந்த வருடம் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறீர்களே?
 
இரண்டு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருக்கும் நடன  திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டேன்.
 
புத்தாண்டில் எந்தெந்த படங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
 
பாகுபலி இரண்டாம் பாகம் படத்தை மட்டும் புத்தாண்டில் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். இந்த படம் அதில் பணியாற்றிய நடிகர்,  நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே முக்கிய படம். அது எல்லோருக்கும் பெயர் வாங்கி கொடுக்கும் என்ற  நம்பிக்கை உள்ளது.
 
புத்தாண்டில் இந்தியில் நடிப்பீர்களா?
 
நல்ல கதை வந்தால் இந்தியில் நடிப்பேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments