Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன வயதிலேயே த்ரில்லர் படங்கள் பிடிக்கும் - அதே கண்கள் ஷிவதா பேட்டி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (16:31 IST)
நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமான ஷிவதாவுக்கு குறிப்பிடும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. சென்ற வாரம் வெளியான அதே கண்கள் திரைப்படம் ஷிவதாவின் திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷிவதா.


 
 
அதே கண்கள் படத்துக்கு கிடைத்திருக்கும் விமர்சனம் திருப்தியாக உள்ளதா?
 
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. நல்ல பாஸிடிவான விமர்சனங்கள் படத்துக்கு வந்துகிட்டிருக்கு. இப்படியொரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் சி.வி.குமார் சாருக்கும், இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
 
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
 
ரசிகர்கள் அனுப்புகிற மெசேஜை தொடர்ந்து படிச்சிட்டிருக்கேன். ரசிகர்கள் பாராட்டுறது மகிழ்ச்சியாக இருக்கு.
 
ஜீரோ, அதே கண்கள் என்று தொடர்ந்து த்ரில்லர் படங்களில் நடிக்கிறீர்களே...?
 
சின்ன வயதிலேயே எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். என்னுடைய விருப்பத்துக்கேற்ப படங்கள் அமைந்தது ஒருவகையில் திருப்திதான்.
 
ஜீரோ ஹிட் கிடையாதே?
 
அந்தப் படம் சரியாகப் போகலைன்னாலும், வித்தியாசமான கதையில் நடிச்ச திருப்தி இருக்கு. அந்தப் படத்தில் நான் ரொம்பவும் ஈடுபாட்டோடு நடிச்சேன்.
 
இனியும் த்ரில்லர் படம் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா?
 
கண்டிப்பா நடிப்பேன். எனக்கு என்னுடைய கதாபாத்திரமும், கதையும்தான் முக்கியம். ஜீரோ சரியாக போகலை என்று அதே கண்கள் படத்தை தவிர்த்திருந்தால் இப்படியொரு வெற்றி கிடைத்திருக்காதே.
 
உங்களை அறிமுகப்படுத்திய மலையாளத்தில் நடிக்கிறீர்களா?
 
பாசிலின் லிவிங் டுகெதர் படத்தின் மூலம்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். மலையாளத்தை எப்படி மறக்க முடியும். போன வருடம் ஜெய்சூர்யாவுடன் நான் நடித்த படம் சூப்பர்ஹிட்டானது. இந்த வருடம் ஜெயராமுடன் அச்சாயன்ஸ் படத்தில் நடிச்சிட்டிருக்கேன்.
 
தமிழில் என்னென்ன படம் நடிக்கிறீர்கள்?
 
வல்லவனுக்கு வல்லவன், கட்டம் என்று இரண்டு படங்கள் இருக்கு. இந்த வருடம் இன்னும் 3 படங்களில் புதிதாக நடிக்க இருக்கிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments