Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகரம் தொடு கதை கேட்டதும் ஓகேன்னு சொல்லிட்டேன் - விக்ரம் பிரபு

சிகரம் தொடு கதை கேட்டதும் ஓகேன்னு சொல்லிட்டேன் - விக்ரம் பிரபு
, சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:31 IST)
ஹாட்ரிக் வெற்றியுடன் எந்தவொரு வாரிசு நடிகருக்கும் கரியர் ஆரம்பித்ததில்லை. கமல் சொன்னது போல இது பிரபுவின் மகன் என்பதால் கிடைத்த வெற்றியல்ல, விக்ரம் பிரபுவின் திறமைக்கு கிடைத்த வெற்றி. அவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சிகரம் தொடு படத்துக்கும் முதல் படத்தின் பாஸிடிவ் எனர்ஜியோடு பேசுகிறார் விக்ரம் பிரபு. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்ரம் பிரபு படம் குறித்து பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக.
கௌரவ் சிகரம் தொடு கதை சொன்னதும் நடிக்க சம்மதித்தீர்களா?
 
கதை கேட்டப்பவே பிடிச்சிருந்திச்சி. ஃபேமிலி, ஆக்ஷன், காமெடி எல்லாத்தையும் சேர்த்து சொன்னார். ஸ்கிரிப்டை நாம படிச்சு தெரிஞ்சுக்கலாம். அதைவிட இயக்குனர் அந்தக் கதையை சொல்லி கேட்கும் போதுதான் அந்த கதையில் எவ்வளவு தூரம் அவருக்கு ஈடுபாடு இருக்கு, எவ்வளவு தூரம் அதை யோசிச்சு வச்சிருக்காங்க அப்படிங்கிறது ஈஸியா புரிஞ்சிடும். ஒரு சிலருக்குதான் ஒரு சீனை டிஸ்க்ரைப் பண்ணத் தெரியும். இவர் அதனை ரொம்ப நல்லா செய்வார். கேட்கும் போதே உங்க மனசுல படம் பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி இருக்கும். ஸோ, கதை கேட்டதும் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டேன். 
 

படத்தின் கேமராமேன் விஜய் உலகநாதன் பற்றி...?  
  
எங்களோட டீம் ரொம்ப நல்லா இருந்திச்சி. கௌரவ் சார் என்கிட்ட கதை சொன்ன போதே கேமரா ஆங்கிளோட சொன்னார். அப்போதான் தெரிஞ்சது, கேமராமேன் அவரோட ஃப்ரெண்டாகதான் இருப்பாரு. இவ்வளவு கஷ்டமாக யோசிச்சு யாரும் ஷாட் எல்லாம் சொல்ல மாட்டாங்க. கௌரவ் சார் சொன்ன மாதிரி... இன்னும் சொன்னா அதைவிட பெட்டரா ஷாட்ஸ் கம்போஸ் பண்ணுனாங்க. கேமராமேனா அவரோட வொர்க் ரொம்ப பெரிசு.
webdunia
யு டிவியில் இது உங்களுக்கு முதல் படம். தனஞ்செயனின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? 
 
புரொடியூசர் தனஞ்செயன் சார் ஆபிஸுக்கு கௌரவ் சார் கூட்டிட்டு போனார். அவர்கிட்ட நான், இந்தப் படம் உங்களுக்கு ஒரு பெரிய படமா இருக்கும். ஆடியன்ஸ்கிட்ட போய் சேர்கிற மாதிரி ஒரு நல்ல படம். இதை நீங்க எழுதியே வச்சுக்கங்க. இந்தப் படத்துல என்னைக்குமே டவுட் வைக்காதீங்க. ஃபுல் சப்போர்ட் கொடுங்கன்னு சொன்னேன். அதே மாதிரி இன்னைக்குவரை முழு ஆதரவு தந்திட்டிருக்கிறார். 
 

இமான்கூட மீண்டும் ஒண்ணு சேர்ந்திருக்கீங்க...?
 
இமான் பத்தி சொல்லவே வேண்டாம். என்னுடைய முதல் படம் கும்கி. அதில் சாங்ஸ்தான் முதல் இன்விடேஷன். அதுதான் தூக்கிட்டுப் போச்சு எல்லார்கிட்டயும். இப்போ மீண்டும் அஞ்சு அழகான பாட்டு தந்திருக்கார். ஒவ்வொண்ணும் ஒருவிதமா இருக்கு. அந்த வெரைட்டியை ஒரே ஆல்பத்தில் அவர் காட்டியிருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கு. 
webdunia
சதீஷ் கூட இது உங்களுக்கு முதல் படம். எப்படியிருந்தது?
 
சதீஷ் கிட்டத்தட்ட என்னுடைய ஏஜ் குரூப்ங்கிறதால அவர்கூட பேசுறது நடிக்கிறது எல்லாமே ஈஸியா இருந்தது. காமெடி டைமிங் ஈஸியா அவர்கூட பிடிக்க முடிஞ்சது. அதனால அவர்கூட வொர்க் பண்ணுனது ஈஸியா இருந்தது. 
 
நாயகி...?
webdunia
மோனல் கூட வொர்க் பண்ணுனது வொண்டர்ஃபுல்லா இருந்திச்சி. அவங்களுக்கு தமிழ் இன்டஸ்ட்ரி புதுசு. அவங்களுக்கு தமிழ்ல பெரிய லைஃப் இருக்கு. 
 

Share this Story:

Follow Webdunia tamil