இந்த வருஷமே திருமணம், ஆளை சொல்ல மாட்டேன் - சித்தார்த் பேட்டி

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (12:16 IST)
ஜிகர்தண்டாவின் வெற்றி பூரிப்போடு பிரஸ்ஸை சந்தித்தார் சித்தார்த். எடக்கு மடக்கான கேள்விகளுக்கு, இப்போதைக்கு சொல்ல முடியாது என்றோ, இயக்குனரிடம் கேளுங்கள் என்றோ அலட்டாமல் எஸ்ஸானார். முதலில் வந்து விழுந்த விஷயம் படத்தின் நீளம்.
 
ஜிகர்தண்டாவின் நீளம் அதிகமாக இருக்கே?
 
படம் முடிந்த பிறகு நானும், கார்த்திக் சுப்பாராஜும் பேசிகிட்ட முதல் விஷயம் படத்தோட நீளம்தான். இரண்டு மணி ஐம்பத்தியிரண்டு நிமிஷங்கள் வருது.

நீளம் அதிகம் என்றாலும் யாரும் சலிச்சுக்க மாட்டாங்க, ரசிப்பாங்கன்னு நினைத்தோம். அதுதான் நடந்திருக்கு. 
 

வெற்றியை எப்படி ஃபீல் பண்றீங்க?
 
போன வருஷம் தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றியடைஞ்சது. இந்த வருஷம் ஜிகிர்தண்டா. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
 
அடுத்த சந்தோஷமான சந்திப்பு உங்க திருமணம் தொடர்பானதா இருக்குமா?
 
அதெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. ஆனா, இந்த வருஷம் நான் திருமணம் செய்துப்பேன்.
காதல் திருமணமா? நடிகையா?
 
திருமணம் இருக்கும். காதல் திருமணமா ஆள் யார்ங்கிறதையெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது.
 
ஜிகர்தண்டாவில் உங்களைவிட சிம்ஹாவுக்குதானே முக்கியத்துவம்?
 
இந்தப் படத்தில் என்னைவிட சிம்ஹாவுக்குதான் ஸ்கோப் அதிகம்னு எனக்குத் தெரியும். படம் வர்றதுக்கு முன்னாடியே இதை நான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நண்பனான அவனுக்கு கிடைச்சிருக்கிற இந்த பாராட்டுக்கள் எனக்கு சந்தோஷமாக இருக்கு.
 

இன்னொரு நடிகருக்கு ஸ்கோப் உள்ள படத்தில் எப்படி நடிக்க ஒத்துகிட்டீங்க?
 
ரங் தே பசந்தியில் நடிக்கிறபோது தன்னோட கேரக்டரை சுருக்கி எனக்கு ஸ்கோப் கொடுத்தார் அமீர் கான். எட்டு நிமிஷம் ஒரு காட்சி வரும். அதில் என்னை நடிக்கவிட்டு எனக்காக வெயிட் பண்ணுவார். அன்னைக்கு மத்தவங்களுக்கும் இடம் கொடுத்து நடிக்கணும்ங்கிறதை புரிஞ்சுகிட்டேன்.
உங்களுக்கு பொருத்தமான ஜோ‌டி யார்?
 
ஜோ‌டியை நான் முடிவு பண்றதில்லை. டைரக்டர்தான் முடிவு செய்வார். எனக்கு யார் பொருத்தமாக இருப்பார்ங்கிறது அவர்களுக்குதான் தெரியும்.
 

 
சித்தார்த்தின் ரசிகை நான்னு லட்சுமிமேனன் சொல்லியிருக்கிறாரே?
 
என்னோட ரசிகைன்னு புகழவும் செய்வார், பாய்ஸ் ரிலீஸானப்போ இரண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன்னு காலை வாரவும் செய்வார்.
ஜிகர்தண்டா த டர்ட்டி கார்னிவால் படத்தின் காப்பின்னு ஒரு பேச்சிருக்கே?
 
அதை நீங்க கார்த்தி கிட்டதான் கேட்கணும்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெல்ஜியம் கார் ரேஸில் 2ம் பரிசை வென்ற அஜித்தின் டீம்!.. தல செம மாஸ்!..

5 நிமிஷம் லேட்டா போனா படமே புரியாது!.. கர இயக்குனர் விக்னேஷ் ராஜா சொல்றத கேளுங்க!..

அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் அட்லி - குவியும் வாழ்த்துக்கள்!

தீபிகா படுகோன் 2வது முறையாக கர்ப்பம்.. அட்லி படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

Show comments