செல்வராகவனின் கான் படத்தில் நடிப்பேன் - சிம்பு பேட்டி

செல்வராகவனின் கான் படத்தில் நடிப்பேன் - சிம்பு பேட்டி

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:02 IST)
இது நம்ம ஆளு வெற்றி பெற்றதற்காக உடன் பணிபுரிந்தவர்களுக்கு வாழ்த்து, நண்பர்களுக்கு பார்ட்டி என்று விழாக்கால மனநிலையில் இருக்கிறார் சிம்பு.


 


தனது படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றியும் கூறியுள்ளார். அத்துடன் வீடியோ சாட்டிங்கில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். அந்த கேள்வி பதில்கள் இங்கே உங்களுக்காக.
 
இது நம்ம ஆளு வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
இது நம்ம ஆளு வெற்றியைப் பற்றி எல்லாம் ஒன்று நினைக்கவில்லை. நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், படம் நன்றாக போகிறது என்பதில் தான் எனக்கு சந்தோஷம். 
 
உடல் எடை அதிகரித்துவிட்டதே?
 
உடல் எடையை படத்துக்காக கூட்டியிருக்கிறேன். அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் எடையை குறைக்க இருக்கிறேன். 
 
செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட கான் படம் என்னவானது?
 
செல்வராகவன் சார் இன்னொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் முடித்துவிட்டு வந்தவுடன் கான் படம் தொடங்கப்படும். 
 
திருமணம் செய்யும் எண்ணமுண்டா?
 
திருமணம் செய்யலாம் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். பெண் வருகிற அன்றைக்கு வரட்டும்.
 
வேட்டை மன்னன் படத்துக்கு என்னதான் பிரச்சனை?
 
வேட்டை மன்னன் படத்தில் பிரச்சினை தயாரிப்பாளர் தான். அவர் பண்ணுங்கள் என்றால் நாங்கள் பண்ண தயாராக இருக்கிறோம்.
 
மன்மதன் 2 வருமா?
 
மன்மதன் 2 பண்ண நேரம் இல்லை என்பதுதான் சரி.
 
அமீர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக சொன்னது என்னவாயிற்று?
 
அமீர் சார் படம் இருக்கிறது. அவர் மற்றொரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதை முடித்தவுடன் அடுத்தாண்டு அவருடன் படம் பண்ணுவேன். 
 
விஜய்யுடன் ஏன் நீங்கள் நெருக்கமாக இல்லை?
 
விஜய் எனக்கு அண்ணன் மாதிரி. சின்ன பையனாக இருந்ததில் இருந்தே தெரியும். நான் அஜித் ரசிகனாக இருப்பதால், விஜய் அண்ணாவுடன் நான் எவ்வளவு க்ளோஸ் என்பது தெரியாது. நான் அதைப் பற்றி பெரிதாக பேசுவதில்லை. விஜய் அண்ணாவுக்கு நான் எவ்வளவு க்ளோஸ் என்பது அவருக்கு தெரியும்.
 
உங்களுக்குப் பிடித்த அஜித், ரஜினியுடன் நடிப்பீர்களா?
 
ரஜினி சார் மற்றும் அஜித் சார் இருவருடன் நடிப்பேன். ஆனால் அதற்கேற்ற கதைகள் வர வேண்டும்.
 
அடுத்த படங்கள் பற்றி...?
 
அடுத்தாண்டு இறுதியில் தலைவர், தல பண்ணிய பில்லா படத்தை பண்ணவிருக்கிறேன்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

திரையுலகில் தடம் பதிக்கும் பிரபுதேவாவின் மகன்: வைரலாகும் முதல் முதலாய் ஆல்பம்

இயக்குனர் அட்லி குடும்ப நிகழ்வில் விஜய்!.. வைரலாகும் வீடியோ!...

சார் எனக்கு பயமா இருக்கு!... அதிர வைக்கும் காளிதாஸ் 2 டிரெய்லர் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments