எனக்குப் பிடித்த நடிகை சிம்ரன் - ஜெயம் ரவி பேட்டி

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2015 (16:54 IST)
தனி ஒருவன் ஜெயம் ரவியை மாஸ் ஹீரோவாக்கியிருக்கிறது. பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த பூலோகம் திரைக்கு வந்திருப்பது ஜெயம் ரவிக்கு இரட்டை சந்தோஷம். பூலோகம் வெளியாகியிருப்பதையொட்டி பத்திரிகைகளுக்கு ஜெயம் ரவி பேட்டியளித்தார்.


 
 
அசின் முதல் நயன்தாராவரை முன்னணி நடிகைகள் பெரும்பாலானவர்களுடன் நடித்துவிட்டீர்கள். அதில் யார் உங்களுக்கு பொருத்தமானவர்?
 
எனக்கு பிடித்த நடிகை, சிம்ரன். பொருத்தமான கதாநாயகிகள் திரிஷாவும், ஜெனிலியாவும்.
 
ஷங்கர், பாலா இரண்டு பேரும் ஒரே நேரத்தில் உங்களை நடிக்க அழைக்கிறார்கள், உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
 
இரண்டு பேர் படங்களையும் விடுவதற்கு எனக்கு மனசு இருக்காது. இருவரின் படங்களிலும் நடிக்க முயற்சிப்பேன்.
 
யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை?
 
எங்க அண்ணன் மோகன்ராஜா டைரக்ஷனில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். நான் துவளும்போதெல்லாம் எனக்கு தோள் கொடுப்பது எங்க அண்ணன்தான்.
 
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியிலும் குத்துச் சண்டை வீரர், பூலோகத்திலும் அதே. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
 
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், ‘கிக் பாக்சராக’ நடித்து இருந்தேன். பூலோகம் படத்தில், ‘ஹெவி வெயிட் பாக்சர்’ ஆக நடித்து இருக்கிறேன். இரண்டும் வேறு வேறு கதைக்களங்கள். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான உணர்ச்சிகள் மாறுபட்டுள்ளன.
 
மிருதன் என்ன மாதிரி கதை?
 
இயற்கைக்கு எதிராக நாம் திரும்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்லும் படம் ‘மிருதன்.’
 
கிசுகிசுவில் நீங்கள் மாட்டுவதில்லையே?
 
வேலையை மட்டும் செய்கிறேன். அப்பா கற்றுக் கொடுத்த ஒழுக்கம் இது. 
 
நண்பர்கள்...?
 
எனக்கென்று பள்ளிக்கூட நண்பர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களுடன் மட்டுமே நெருக்கமான நட்பில் இருக்கிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவசம் 9 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி.. ‘ஜெயிலர் 2’ முதல் ‘பாக்கெட் நாவல்’ வரை..!

போலி வசூல் கணக்குகளை காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.. துரந்தர் 2 வசூல் குறித்து பிரபல இயக்குனர்..!

கார் விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு.. அதிவேகத்தில் கார் சென்றதால் விபத்தா?

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

Show comments