Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் உடம்பு கட்டுக்கோப்பாக இருக்க காரணம்... - நடிகை ராகுல் ப்ரீத் சிங் பேட்டி

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (10:21 IST)
தமிழில் ஒதுக்கப்பட்டு தெலுங்குக்கு போய், அங்கு முன்னணி நடிகையான பிறகு தமிழில் கொண்டாடப்பட்ட தமன்னா,  இலியானா வரிசையில் வருகிறார், ராகுல் ப்ரீத் சிங். தடையற தாக்க, புத்தகம் படங்களில் நடித்த போது இவர்  அதிர்ஷ்டமில்லாத நடிகை. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் இவருக்கு தமிழில் மவுசு அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியமானது? ராகுல் ப்ரீத் சிங்கே சொல்கிறார்.

 
நேற்றுவரை அடையாளம் தெரியாமல் இருந்த நீங்கள் இப்போது முன்னணி நடிகை. எப்படி இது சாத்தியமானது?
 
சினிமாவில் யார், எப்படி மாறுவார் என்றெல்லாம் கணிக்க முடியாது. பல ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் ஒருவர் நிலைமை  ஒரே நாளிலேயே தலைகீழாய் மாறிவிடும். எனக்கு ஆரம்பத்தில் படங்கள் குறைவாகவே வந்தன. கடந்த வருடம் 3 படங்கள்  தோல்வி அடைந்தன. இதனால் என்னை அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். நான் நடித்தால் படம் ஓடாது  என்றும் முத்திரை குத்தினார்கள்.
 
எப்படி அதிர்ஷ்டக்கார நடிகையாக மாறுனீர்கள்?
 
தோல்விகளால் நான் துவண்டு விடவில்லை. தொடர்ந்து போராடினேன். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான படங்கள்  வெற்றிகரமாக ஓடின. தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்கள் இப்போது  அதிர்ஷ்டக்கார நடிகை என்று கொண்டாடுகிறார்கள்.
 
நாளை...?
 
நாளை படங்கள் ஓடாவிட்டால் மீண்டும் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்பார்கள்.
 
இந்த இடத்திற்கு நீங்கள் வர முக்கியமான காரணம் என்ன?
 
இந்த இடத்துக்கு வருவதற்கு நான் நிறைய உழைத்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
 
இது மட்டும்தானா...?
 
வெற்றியை பார்த்து எனக்கு தலைக்கனம் வரவில்லை. தற்போது திரைக்கு வந்து தோல்வி அடைந்த பல படங்களில்  என்னைத்தான் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். கதை பிடிக்காததால் மறுத்தேன். நல்ல கதைகளை இப்போது என்னால்  கணிக்க முடிகிறது.
 
அதிர்ஷ்டத்தை நம்புகிறீர்களா?
 
அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்புதான் முக்கியம். கடின உழைப்புக்கு பலன் உடனே கிடைக்காவிட்டாலும் காத்திருந்தால்  நிச்சயம் கிடைக்கும்.
 
படங்களின் வெற்றிக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
நடிகர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு முயற்சியே காரணம். ஆனால், இயக்குனர் திறமை இல்லாதவராக  இருந்தால் படம் ஓடாது.
 
உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க என்ன செய்கிறீர்கள்?
 
உணவு, உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். பழம், காய்கறிகள் அதிகம் சாப்பிடுகிறேன்.  சொந்தமாக உடற்பயிற்சி கூடமும் வைத்து இருக்கிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments