நண்பனே நடு ராத்திரியில் இப்படி நடந்துக்கொண்டான்... காஜல் பசுபதி வருத்தம்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (15:18 IST)
சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் காஜல் பசுபதி. நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது நடன கலைஞர் சாண்டிக்கும், காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்பவரை மறுமணம் செய்துக்கொண்டு லாலா என்ற பெண் குழந்தை மற்றும் ஒரு மகனுக்கு அப்பவனார். இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
 
இந்நிலையில் காஜல், பிரபல தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள நபரை நன்கு தெரிந்த தன் நண்பர் ஒருவரிடம் சீரியலில் நடிக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். அப்போது நடு ராத்திரியில் போன் செய்து பேசியதால் என்னிடம் தவறான மற்றும் ஆபாசமாக பேசினான். ஒரு நண்பனே என்னிடம் அப்படி நடந்துக்கொண்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’துரந்தர்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்த முதல்வர்.. என்ன காரணம்?

80ஸ் நடிகர்களின் காதல் கதைகள்.. ரஜினி முதல் ராமராஜன் வரை இத்தனை லவ் ஸ்டோரியா?

தன்னடக்கத்துடன் இருங்கள்; காடு உங்களுக்கான சரியான இடத்தை காட்டும்.. ரிமா கல்லிங்கள் புத்தாண்டு தத்துவம்..!

விஜய்யின் 'ஜனநாயகன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சாதனை படைக்குமா?

ஜனவரி 1 முதல் புதிய பதிவில் 'துரந்தர்' ரிலீஸ்.. அரசியல் அழுத்தம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments