பாகுபலி 3 -இல் நடிக்க எதையும் இழக்க தயாராக இருக்கிறேன் - காஜல் அகர்வால் பேட்டி

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (11:18 IST)
தமிழில் அஜித், விஜய், தெலுங்கில் சிரஞ்சீவி, ராணா என்று எந்த மொழியிலும் காஜல் அகர்வால் பிஸி. இந்திப் படங்களையும் சேர்த்தால் அவர் பிஸியோ பிஸி. தனது புதிய படங்கள் குறித்து அவர் பேசியதன் தொகுப்பு...


 

தீபாவளிக்கு உங்கள் படம் வரவில்லை என்று கவலை இருந்ததா?

இல்லை. ப்ரெண்ட்ஸுடன் ஏ தில் ஹே முஷ்கில் படம் பார்த்து ஜாலியாக இருந்தேன்.

அஜித் படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான வேடம்?

அதை இப்போது சொல்ல முடியாது. வித்தியாசமான வேடங்களில் ஏன் நடிப்பதில்லைன்னு கேட்கிறவர்களுக்கு இந்தப் படம் பதிலாக அமையும். நான் இதுவரை நடிக்காத மிக வித்தியாசமான வேடம்.

ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? ஹீரோவை வைத்தா?

முதலில் படத்தின் கதையை பார்ப்பேன். அப்புறம் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கா என்று கவனிப்பேன். பிறகு ஹீரோ, இயக்குனர் யார் என்று பார்த்து தேர்வு செய்வேன்.

அஜித், விஜய் இருவருடன் நடிப்பதில் என்ன வேறுபாடு?

இரண்டு பேருமே அடுத்தவர்களை மதிக்கிற ஜென்டில்மேன்கள், சூப்பர் ஸ்டார்கள்.

கவலை வேண்டாம் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

இது காதலும், காமெடியும் கலந்த கதை. இதில் திவ்யாங்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவொரு ஜாலியான படமாக இருக்கும்.

பாகுபலியில் நடிக்க எதையும் இழக்க தயார்னு சொல்லியிருக்கீங்களே?

பாகுபலி 3 இல் நடிக்க நான் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். பாகுபலி மிக முக்கியமான படம். அதுபோன்ற படங்களில் நடிப்பது எந்தவொரு நடிகைக்குமே கனவுதான்.


 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவுக்கு இட்லி சமைத்து கொடுத்த அஜித்.. விஜய்யும் ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்..!

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

அடுத்த கட்டுரையில்
Show comments