Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள் - நமிதா தடாலடி பேட்டி

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (10:08 IST)
அரசியல்வாதி ஆன பிறகு நமிதாவின் பேச்சில் ஒரு தடாலடி தெரிகிறது. யாரும் பேசத் துணியாத விஷயங்களை பேசுகிறார். குழந்தைகள் பாலியல் சீண்டல் உள்பட நமிதா ஆவேசப்படும் விஷயங்கள் நிறைய உள்ளன. சாயா படம் குறித்த அவரது பேச்சில் வெளிப்பட்டவை உங்களுக்காக...

 
சாயா...?
 
சாயா ஒரு சமூகக் கருத்தைச்  சொல்லும் படம்.
 
ஏன் அரசியல்...?
 
சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால்  திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.
 
சாயா படம் பற்றி...?
 
இந்தப் படம் குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி பேசுகிறது. அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர்த்துகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.
 
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் பற்றி...?
 
இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன்  மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும்.எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று  சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 
சாயா படத்தின் முக்கியத்துவம்...?
 
குழந்தைகளிடம் நிறைய பேச வேண்டும், கேட்க வேண்டும். இதை அம்மா, அப்பா இரண்டு பேரும் செய்ய வேண்டும். இதையெல்லாம் சிந்திக்க வைக்கும்படி சாயா திரைப்படம் இருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்