நல்ல படைப்புகள் எப்போதும் பொதுமக்களை சென்றடையும் - சமுத்திரகனி பேட்டி

நல்ல படைப்புகள் எப்போதும் பொதுமக்களை சென்றடையும் - சமுத்திரகனி பேட்டி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (13:28 IST)
அப்பா படம் திரையிட்டுள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார். 


 

 
 
அப்படி ஈரோடு வந்த அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
எதற்கு இந்த ஈரோடு பயணம்?
 
ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்க்கும் போதுதான் அவர்களின் உணர்வுகளை உணர முடிகிறது. அதனால், அப்பா படம் திரையிட்டுள்ள அனைத்து தமிழக திரையரங்குகளுக்கும் சென்று வருகிறேன். 
 
இந்தப் படத்தை எதன் அடிப்படையில் உருவாக்கினீர்கள்?
 
என் மனதில் இருந்த, என்னை பாதித்த சம்பவங்களை வைத்து இந்தக் கதையை உருவாக்கினேன். 

இதுபோன்ற படங்கள் வெகுஜனங்களை அடைவதில்லை என்ற எண்ணம் உள்ளதே?
 
நல்ல படைப்புகள் எப்போதுமே பொது மக்களை போய் சேரும் என்பது அப்பா படம் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. நல்ல படைப்புகள் வராத போதுதான் ஏதோ படத்தை பார்த்து கைதட்ட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
 
படம் வெற்றி பெற்றுள்ளதா?
 
படத்தை எடுத்த போது இது வெற்றி பெறுமா என்று பலர் நினைத்தார்கள். ஆனால் முழு நம்பிக்கை வைத்து நான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படம் பொது மக்களின் வரவேற்பை பெற்று உள்ளது.
 
இந்தப் படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்தேன். அது மக்களின் உணர்வுகளோடு கலந்திருந்தது. மக்களின் ரசனைக்கேற்ற படங்களை படைப்பவர்தான் நல்ல கலைஞனாக கருதப்படுகிறார். இந்த படம் சக்சஸ் ஆகி இருப்பது சந்தோ‌ஷமாக உள்ளது.
 
திருட்டு டிவிடிக்கு என்னதான் தீர்வு...?
 
தமிழக அரசு நினைத்தால் திருட்டு வி.சி.டிக்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

அடுத்த கட்டுரையில்
Show comments