சிம்புவிற்கும் தனுஷிற்கும் இது ஒன்றுதான் வித்தியாசம் : போட்டுத் தாக்கிய கௌதம் மேனன்

சிம்புவிற்கும் தனுஷிற்கும் இது ஒன்றுதான் வித்தியாசம் : போட்டுத் தாக்கிய கௌதம் மேனன்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (17:02 IST)
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம், நடிகை மஞ்சுமா மோகன் சில ஜாலி கேள்விகள் கேட்டார்.


 

 
‘அச்சம் என்பது மடமையடா ’படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர்தான் இந்த மஞ்சுமா மோகன். 
 
அவர் கௌதம் மேனனிடம் “ நீங்கள் தனுஷ், சிம்பு இருவரை வைத்தும் படம் இயக்கியுள்ளீர்கள். அவர்கள் இருவரிடமும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?” என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் “அவர்கள் இருவரையும் நமக்கு ஏற்றவாறு எப்படியும் மாற்றிக்கொள்ளலாம். அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம் என்பது, படப்பிடிப்பிற்கு தனுஷ் சொன்ன நேரத்திற்கு வருவார். ஆனால் சிம்பு சொன்ன நேரத்திற்கு வர மாட்டார்” என்று கூறினார்.
 
ஏற்கனவே படப்பிடிப்பிற்கு சிம்பு சரியான நேரத்திற்கு செல்லமாட்டார் என்ற கெட்டப்பெயர் இருக்கிறது. அதை, கௌதம் மேனனும் தற்போது உறுதி செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நல்ல கதைன்னா என்கிட்ட வாங்க!.. கெணத்த காணோம் விழாவில் பேசிய யோகிபாபு...

அமைதிப்படை ரீ-ரிலீஸ்!.. எலெக்‌ஷனுக்கு முன்னாடியே வருது!..

அவர் இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் கேமியோ!. அண்ணாச்சி ஆசை நிறைவேறுமா?!..

ட்ரோல்களைத் தாண்டி அதிரடி : லீடர் படத்தைத் தொடர்ந்து 3 வேடங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்!.. ஆதிக் ரவிச்சந்திரன் என்னாச்சி?...

அடுத்த கட்டுரையில்
Show comments