சரியா நடிக்கலைன்னா அப்பாவிடமிருந்து திட்டுவிழும் - நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் பேட்டி

Webdunia
சனி, 14 மார்ச் 2015 (11:05 IST)
பட்டத்துயானை படத்தில் அறிமுகமானார் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. ஒரே படம். அதன் பிறகு மையிட்டு தேடியும் அகப்படவில்லை ஐஸ்வர்யா. என்னாச்சு... ஒரே படத்துடன் பீல்டை துறந்துவிட்டாரா என்று நினைத்தநேரம் மீண்டும் நடிக்க வருகிறார். இந்தமுறை அப்பாவின் இயக்கத்தில். அவரது மினிப் பேட்டி.
அடுத்தது என்ன படத்தில் நடிக்கிறீங்க?
 
அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதற்குதான் தயாராகிவிட்டிருக்கேன்.
 
என்ன மாதிரியான கதாபாத்திரம்?
 
நான் நடிக்கப் போகிற படத்தில் கதக் டான்சராக வர்றேன். ஏற்கனவே டான்ஸ் தெரியும் என்றாலும் கதக் தெரியாது. அதனால் கதக் கத்துகிட்டிருக்கேன். வேற டைக்டர்ஸுன்னா பரவாயில்லை. அப்பா டைரக்ஷன். அவர் உருவாக்குன கேரக்டருக்கு உயிர் கொடுக்கணும். இல்லைன்னா திட்டுவிழும்.
 
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
 
இரண்டு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மனசுக்குப் பிடிக்கலை, வேண்டாம்னு சொல்லிட்டேன். நல்ல கதை வந்தா நடிப்போம் இல்லைன்னா வேற வேலையில் கவனம் செலுத்தலாம்னு பேஷன் டிஸைனிங் கத்துகிட்டேன். இப்போ அப்பா இயக்கப் போகிற படத்தில் நான்தான் காஸ்ட்யூம் டிஸைனர். 
 
அப்பாவோட இயக்கத்தில் நடிக்கப் போறது எப்படி இருக்கு?
 
அப்பாங்கிறதெல்லாம் வீட்லதான். ஷுட்டிங் ஸ்பாட்ல அவர் டைரக்டர், நான் நடிகை. அவர் சொல்றதை நல்லபடியா செய்யணும், நல்ல நடிகைன்னு பாராட்டணும். இதுதான் இப்போதைக்கு என் முன்னாடி இருக்கிற சவால்.
 
இது தமிழ்ப படம்தானே?
 
தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகளில் தயாராகிறது. மூணுலேயும் நான் நடிக்கிறேன்.
 
ஹீரோ யார்...?
 
அதை அப்பாவே அறிவிப்பார்.
 
படத்தில் வேறு என்ன ஸ்பெஷல்...?
 
வொர்க்‌ஷாப் வைத்து எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி அளித்துவிட்டுதான் ஷுட்டிங்குக்கே போகப் போறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லார் மேலையும் ஆக்‌ஷன் எடுங்க!.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த எஸ்.கே!...

ரிலீசுக்கு முன்பே லீக்கான ஜனநாயகன் காட்சிகள் - எச்.வினோத் போட்ட பதிவு

ஜனநாயகன் படத்த டவுன்ட்லோட், ஷேர் பண்ணா லீகல் ஆக்‌ஷன்!.. தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!...

ஜனநாயகன் லீக்!.. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவு!.. ஹெச்.வினோத் ஃபீலிங்...

அட்லீயின் ‘ராக்கா’.. அல்லு அர்ஜூனை விட தீபிகாவுக்கு 7 மடங்கு சம்பளம் குறைவா? ராஷ்மிகாவுக்கு எவ்வளவு?

Show comments