Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தப் படத்தில் சந்தானம் இல்லை - உதயநிதி பேட்டி

அடுத்தப் படத்தில் சந்தானம் இல்லை - உதயநிதி பேட்டி
, சனி, 28 மார்ச் 2015 (13:18 IST)
ஏப்ரல் 2 -ஆம் தேதி நண்பேன்டா வெளியாவதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் உதயநிதி. அவர் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் இது. நயன்தாராவுடன் நடித்துள்ள இரணடாவது படம். நிருபர்களின் கேள்விகளுக்கு உடனடியாக வந்தது பதில்.
 

 
நண்பேன்டா பற்றி சொல்லுங்கள்?
 
தமிழகம் முழுவதும் 400 தியேட்டர்களில் ‘நண்பேன்டா’ ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது தடவையாக இப்படத்தில் என்னுடன் நயன்தாரா இணைந்துள்ளார். நான் அவருடைய தீவிர ரசிகன். இப்படத்தில் நயன்தாராவுக்கும் எனக்கும் மோதல், காதல் என இரண்டும் கலந்து இருக்கும். இருவரும் சேர்ந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்துள்ளோம். 
 
உங்கள் எல்லா படத்திலும் சந்தானம் இருக்கிறாரே?
 
எனது படங்களில் சந்தானம் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், இப்படத்தில் சந்தானத்துக்கு அதிகமான காட்சிகள் இருக்காது. பெரும்பாலான காட்சிகளில் நான் தனியாகத்தான் நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு பிறகு நான் நடிக்கும் படத்தில் சந்தானம் இல்லை. 
 
இருவருக்குள்ளும் மோதலா?
 
அடுத்தப் படத்தில் சேர்ந்து நடிக்காததால் எனக்கும் சந்தானத்துக்கும் மோதல் என்று வதந்தி பரவி உள்ளது. இருவரும் எப்போதும்போல் நண்பர்களாகவே பழகி வருகிறோம். 
 
ஏன் தொடர்ந்து காமெடிப் படங்கள்? ஆக்ஷன், அரசியல் படங்களில் நடிக்கலாமே?
 
நான் தொடர்ந்து காமெடி படங்களில் நடிப்பதற்கான காரணம், எனக்கு காமெடி படங்கள்தான் நன்றாக வருகிறது. அதனால், ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. அதேபோல், அரசியல் படங்களிலும் நடிக்கமாட்டேன். 
 
இரண்டு படங்களுக்கிடையே ஏன் இந்த இடைவெளி?
 
நான் நடித்த படங்கள் 2 வருடங்கள் கழித்து வெளியானாலும், என்னுடைய பேனரில் வருடத்தில் ஏதாவது ஒரு படம் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. 
 
இதுவும் காமெடிப் படம்தானா?
 
நண்பேன்டா காமெடி படமாக தயாராகி உள்ளது. சந்தானம் ஜோடியாக ஷெரின் வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரன், தமன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 
 
இந்தமுறையாவது வரிவிலக்கு கிடைக்குமா?
 
இந்தப்டத்தை தமிழக அரசின் வரி விலக்கு குழுவினருக்கு காட்டினோம். படத்தை பார்த்து விட்டு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
 
ஏன் அப்படி? என்ன நடிவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
 
ஏற்கனவே என் படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுத்த குழுவினரே இந்தப் படத்தையும் பார்த்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். தற்போது ‘நண்பேன்டா’ படத்துக்கும் வரி விலக்கு அளிக்காததை எதிர்த்து 6 பேர் மீதும் வருகிற 30–ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடருவேன். 

Share this Story:

Follow Webdunia tamil