Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுச்சி லீக்ஸ் விவகாரம் ; இன்னும் இதுபோல் நிறைய வரும் - ஆர்யா அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (09:01 IST)
பின்னணிப் பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், எதிர்காலத்தில் இன்னும் நிறைய வரும் என நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
ஆனால், யாரோ ஒருவர் தன்னுடைய டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் என சுசித்ரா கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், சுசித்ரா தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது செயல்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என அவரின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பற்றி சம்பந்தப்பட்ட எந்த நடிகர், நடிகரும் இதுவரை போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஆர்யா “ தற்போது போலி வீடியோக்கள் வெளிவருவது சர்வ சாதரணமாகி விட்டது. அதுவும், பிரபலமான ஒருவரின் சமூக வலைதள பக்கத்திலிருந்து போலி வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடுவது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. இது தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் இதுபோன்ற போலி வீடியோக்கள் வெளிவரும். இது நல்லதல்ல. இது போன்ற வீடியோக்களை நாம் ஆதரிக்கக் கூடாது.  பிரபலங்களின் பெயரால் வெளியாகும் அனைத்து வீடியோக்களுமே போலிதான். அதில் உண்மை இருக்கிறது என நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments