விஜய் சேதுபதிக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்: டுவிட்டரில் பரபரப்பு

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (07:32 IST)
விஜய் சேதுபதிக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்:
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிரபல இலங்கை பந்து வீச்சாளர் முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஈழத் தமிழர்கள் உள்பட பலர் கோரிக்கை விடுத்தார்
 
ஆனால் இது முரளிதரனின் முழுக்க முழுக்க கிரிக்கெட் வாழ்க்கையை பற்றிய படம் என்றும் இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கும் வகையில் கதை இல்லை என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் நேற்று வெளியான மோஷன் போஸ்டரில் முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமின்றி இலங்கையில் குண்டுவெடிப்பு உள்பட பல காட்சிகள் இருந்ததால் விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதனயடுத்து #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் நேற்றைய ‘800’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இலங்கை தேசிய கொடி விஜய்சேதுபதியின் சட்டையில் இருக்கும் காட்சியும் உள்ளது. இதனையடுத்து இலங்கை தேசிய கொடியை நெஞ்சில் பதிவு செய்த ஒரே தமிழன் விஜய் சேதுபதிதான் என்று அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன
 
இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப் படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அரசின் தேசிய கொடியை ஒரு தமிழரே சட்டையில் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments