Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டோகிராஃபிங்கிறது பெரிய ஆர்ட் - இளையராஜா பேட்டி

போட்டோகிராஃபிங்கிறது பெரிய ஆர்ட் - இளையராஜா பேட்டி
, புதன், 22 ஜனவரி 2014 (11:22 IST)
இளையராஜா தான் எடுத்தப் புகைப்படங்களில் தேர்ந்தெடுத்த 101 புகைப்படங்களை கண்காட்சியாக வைத்துள்ளார். சென்ற 15 ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி இன்றுடன் நிறைவுறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு பத்திhpகையாளர்களை சந்தித்த இளையராஜா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
FILE

நீங்க எடுத்த எல்லா புகைப்படங்களையும் இங்கே வைத்திருக்கிறீர்களா...?

1978 லயிருந்து என்னென்ன கேமரா hpலீஸ் பண்ணுனாங்களோ அதையெல்லாம் வpசையா வாங்கினேன். அப்போதிருந்து டிஜிட்டல் போட்டோகிராஃபி வர்றவரைக்கும் நான் படங்கள் எடுத்திருக்கேன். எத்தனைன்னு கணக்கில்லை. அத்தனையும் இங்க (கண்காட்சி) வரலை.

அம்மாவை எடுத்த புகைப்படம் பற்றி...?

ஒருநாள் வொர்க்குக்கு போய்கிட்டிருக்கிறப்போ - பொதுவா எனக்கு எதுவும் வராது, ஒருநாள் தலைவலி வந்திடிச்சி. தலைவலிக்காக ஒரு டாக்டர் வந்தார். டாக்டர் வந்ததும் அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு போய் அழறீங்களேன்னு அவங்களை ஒரு போட்டோ எடுத்தேன். அப்படி எடுத்ததுதான் அம்மா படம்.

இந்தப் புகைப்படங்களை எப்போது எப்படி எடுத்தீர்கள்...?

இதுவொரு ஆர்ட். பெரிய ஆர்ட். இந்த போட்டோகிராஃபியில முக்கியமான விஷயம் நான் கீழ இறங்கி படம் எடுக்க முடியறதில்லை. கூட்டம் வந்திடும். இதெல்லாம் நான் ட்ராவல் பண்றப்போ எடுத்தது. ஆந்திரா, கர்நாடகான்னு வெளியூர்ல எடுத்தது மட்டும் நான் இறங்கி அல்லது அங்குள்ள கோவிலுக்குள்ள போய் அல்லது அதுக்கு வெளியே எடுத்ததாக இருக்கும். அங்கக்கூட வெளியே இறங்கி எடுத்தப்போ கூட்டங்கள் வந்தது. கர்நாடகாவுலயாகட்டும், ஆந்திராவுலயாகட்டும் வந்து கண்டுபிடிச்சிடhங்க .
webdunia
FILE

ஆந்திராவுல அதிகமா போகலை. கர்நாடகாவுலயும் கார்ல போகிறப்போ காரை நிறுத்தச் சொல்லி கார்லயிருந்தே எடுத்தப் படங்கள்தான் அதிகம். மெனெக்கெட்டு எடுக்கிறதுக்கு டைம் கிடையாது. கேமராமேன்களுக்கு தpஞ்ச எக்ஸ்போஸரோ, ஷ்ஷட்டர் ஸ்பீடோ இதெல்லாம் ஒண்ணுமே தpயாது. இந்த கலர் நல்லாயிருக்கு இந்த காம்பினேஷன் நல்லாயிருக்குன்னு ப்ரேம் பண்ணிட்டு உடனே அந்த ப்ராக்ஷன் ஆஃப் தி செகண்ட்தான் டிஸிஷன். அப்படி எடுத்ததுதான் இந்தப் படங்களெல்லாம். நான் லேபுக்கு கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் என்னென்னா என்னுடைய ப்ரேமை கட் பண்ணக் கூடாது. கலர் கரெக்ஷனும் கூடாது. அஸ் இட் இஸ் என்ன எக்ஸ்போhகியிருக்கோ அதுதான் ப்hpண்ட் பண்ணி தரணும். அப்போதான் நான் எடுக்கிறப்போ என்ன எடுத்தேன்ங்கிறது தpயும்.

நீண்ட எடுத்தப் புகைப்படங்களை இப்போது பார்க்கையில் என்ன தோன்றுகிறது?

நல்ல புகைப்படங்களை எடுக்கிறப்போ தோன்றுகிற உணர்வைவிட அதைப் பார்க்கிறப்போ தோன்றுகிற உணர்வுதான் உணர்வு. ஏன்னா நாம எடுக்கிறப்போ ஏதோவொரு தhண்டுதலில்தான் அந்த இடத்தை போட்டோ எடுக்கலாம்னு நமக்கு தோணுது. ஆனா அதை பார்க்கிறப்போது அந்த பிரேமிங் வேற மாதிரி இருக்கும். ஓபனாக அந்த இடத்தை பார்க்கும் போது அது கிடைக்காது.
webdunia
FILE

இந்தப் புகைப்படங்களில் உங்கள் மனம் கவர்ந்தது?

என் மனசை கவர்ந்ததைதான் இங்க செலக்ட் பண்ணி வச்சிருக்கோம். இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொன்னீங்கன்னாதான் எனக்கு ஏதாவது விஷயம் கிடைக்கும்.

மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?

நிறைய இருக்கு. ஒரு குழந்தை படத்தைப் பார்த்திருப்பீங்க. கர்நாடகாவுல மத்தியானம் ஒரு மணி இருக்கும் அந்த புகைப்படத்தை எடுக்கிறப்போ. அந்த குழந்தை இருக்கிற நிலமையை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சரி, படம் எடுத்திட்டு பணம் கொடுக்கலாம்னு நினைச்சு இரண்டே இரண்டு ஸ்னாப்ஸ்தான் எடுத்தேன். படம் எடுத்த பிறகு கேமராவை வச்சிட்டு பணத்தை எடுத்திட்டு திரும்பிப் பார்த்தா அந்த பெண்ணை காணோம். என் கூட வந்தவங்களையும் போய் தேடுங்கய்யான்னு சொன்னா அந்த பெண்ணை எங்கேயும் காணோம். அது எனக்கு ரொம்ப வருத்தமான அனுபவம்.

இந்த கண்காட்சிக்கான எதிர்வினை எப்படி இருந்தது?

இந்த புகைப்படங்களை பார்த்துட்டு பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் போன் பண்ணி பேசுனாங்க. போட்டோவில் இருக்கிற அந்த பலவிதமான டெப்த்ஸ் நெகடிவ்ல மட்டும்தான் வரும் டிஜிட்டல் போட்டோவில் கிடைக்காதுன்னு ஸ்ரீராம் சொன்னார். அதனாலதான் ஸ்ரீராம் நான் போட்டோகிராஃபியையே விட்டதுன்னு சொன்னேன்.
webdunia
FILE

போட்டோகிராஃபியில் ஆர்வம் வர என்ன காரணம்?

ஆர்வம்னு எல்லாம் சொல்ல முடியாது. வேற வேலை செய்ய முடியாது. தெரியாதுன்னு வச்சுக்குங்களேன். அப்படி எடுக்க ஆரம்பிச்சதுதான்.
webdunia
FILE

இதை எடுக்க முடியாமப் போச்சேன்னு மிஸ் பண்ணுனது ஏதாவது இருக்கா?

நிறைய இருக்கு. ஏன்னா... நீங்க இங்க பார்க்கிறதைவிட மிஸ் பண்ணுனதுதான் அதிகம். போட்டோ எடுக்கும் போது மிஸ்hகும். அந்த செகண்ட் கிடைக்காது.

எந்த நபரை போட்டோ எடுக்க விரும்பறீங்க?

ஒருத்தரும் கிடையாது. அப்படி ஆள்களே இல்லை. நான் விரும்புற ஆள்கள் இல்லை. ஆள்கள் இருக்கலாம், நான் விரும்பலை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil